வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் ஏற்பாட்டில் 89 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (04.10.2026) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-02.30 மணி வரை வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் தலைவர் பாலச்சந்திரமூர்த்தி வீரசுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் 45 ஆண்களும், 06 பெண்களும் என 51 குருதிக் கொடையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றுக் குருதிக் கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்குப் பங்களிப்பு வழங்கினர்.