உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் “சொந்தமாக இருக்க இடம் – அழகான ஒரு வாழ்க்கை” எனும் தொனிப் பொருளில் நாடளாவிய ரீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5000 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை (05.10.2026) காலை-09 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இதன் ஒரு பகுதியாக யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 170 வீடுகள் இன்று  பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. 

இதன் அடிப்படையில் நல்லூர்ப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அரியாலை தென்கிழக்கு (உதயபுரம்) மற்றும் அரியாலை கிழக்கு ஆகிய பகுதிகளில் பயனாளிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துப் பயனாளிகளிடம் கையளித்தார்.