வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் ஏற்பாட்டில் 87 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) யாழ்.வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத் தலைவர் பா.வீரசுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் தற்போது ஏற்பட்டுள்ள இரத்தத் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் 49 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.