தலைவனைத்தாயெனக்கொண்டவன்!

தலைவனைத்தாயெனக்கொண்டவன்
தாயகம் காத்திடச்சென்றவன்

அம்மாவின் இழப்பு உன்னை அசைத்ததா?

அப்பாவின் அன்பு உன்னைத்தடுத்ததா?

ஆசைக்கல்வி உன்னை மறித்ததா?

உற்றநட்பு உன்னைக் கலைத்ததா?

இல்லையே..

தலைவனைத்தாயெனக்கொண்டாய்-அவர்தம்

தமிழே மந்திரம் என்றாய் – பெரு

நெருக்குதல் வந்து முன்னிற்க

நிமிர்ந்தாய் நானே களைவேனென்று.

மறுத்துரைத்த தலைவனை உன் மதியுரையால் மாறச்செய்தாய்

தாய்க்கு வாய்த்த தனையனாய் அமைதிக்களம் ஏகினாய்..

தலைவன் விழிகசிய உனை நீகொடுத்தாய்

எமக்கு வாய்த்த வரமே அண்ணா
உன்னை வஞ்சகத்தால் இழந்தோமே….
வானம் பேறுபெற்றது உன்னவரவால்…