அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடிய 12 பேர் கைது!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் 12 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கும் நேரத்தில், அவர்களின் சொத்துக்களை திருடும் கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.