அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவி மற்றும் நிவாரண நிதிகளைக் நிர்வகிப்பதற்காக, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தலைமையில் உயர்மட்ட தேசியக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிடைக்கும் அனைத்து வெளிநாட்டு நிதிகளையும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்திறனுடனும் நிர்வகிப்பதற்கான பொறுப்பு இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிவாரணப் பணிகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இந்த உயர்மட்ட தேசியக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.





