சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (19) பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காகவும், அழிவுக்குள்ளான உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட துணை மதிப்பீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க நேற்று வியாழக்கிழமை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் துணை மதிப்பீட்டை இன்று நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான 500 பில்லியன் ரூபாய் துணை மதிப்பீட்டை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.




