அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய நபர் கைது!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாங்கொடை நகரசபைக்கு அருகில், வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை கடந்த நவம்பர் 04ஆம் திகதி சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில், கொலைக்கு உதவிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை எல்பிட்டிய – குருந்துகஹஹெதெகம பகுதியில் வைத்து சந்தேகநபரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் மீட்டியாகொட, எரனவில பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இந்தக் கொலையின் முக்கிய சந்தேக நபரின் சகோதரர் என்பது மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலி குற்ற தடுப்புப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.