அம்பலாந்தோட்டையில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெஹிகஹலந்த பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பிரதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று புதன்கிழமை (18) காலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 104 கிராம் 610 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்