அழிக்கப்படும் அபாயகர ஓளடதங்கள் குறித்த வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்குள் தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களால் அழிக்கப்படும் அபாயகர ஓளடதங்கள் குறித்த வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கும் வகையில் புதிய திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களை கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மேலதிகமாக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு நீதிமன்றமும், நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்படும் விஷங்கள், அபின் மற்றும் அபாயகர ஓளடதங்கள் குறித்த வருடாந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்.
அறிக்கையைத் தயாரித்து, ஒவ்வொரு வருட இறுதியில் டிசம்பர் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையிடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உத்தரவின்கீழ் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





