அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமையக் கணிதப் பிரிவில் 3 ஏ பெறுபேறுகள் பெற்றுச் சாதித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனும், இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையத்தின் ஆயுள் அங்கத்தவருமான அமரர்.லவன் அக்சயன் ஞாபகார்த்த இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரை இணுவில் பொதுநூலக கலாச்சார மண்டபத்தில் நடைபெறும்.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் இணுவில் பொதுநூலக அங்கத்தவர்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.




