இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு… ஏற்பாட்டுக் குழுவினர் கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் யாழ் வருகை

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு…. எனும் கருப் பொருளிலான செயற்திட்டம் நாளை வியாழக்கிழமை (14.08.2025) முதல் எதிர்வரும்-20 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான ஐனாதிபதி செயலக ஏற்பாட்டுக் குழுவினர் புகையிரதம் மூலம்   புதன்கிழமை (13.08.2025) பிற்பகல்-02.30 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
புகையிரதம் மூலம் வருகைதந்த ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மனோகரன் சாரதாஞ்சலி, கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான தசூன் உதார மற்றும் துலீப் சேமரத்தன  உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினருக்கு யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்வில் கடற்தொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணப் புகையிரத நிலைய அதிபர் பிரதீபன் , பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகையிரதத்தில் வந்தோரை வரவேற்றனர்.
புகையிரதத்தில் வந்த குழுவினரால் யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்திற்கான இரண்டு புதிய தொலைக்காட்சிப் பெட்டிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.