தமிழக அரசியல் தலைவர்களைச் சந்திக்க இன்று செவ்வாய்க்கிழமை (16.12.2025) தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழு இந்தியாவின் தமிழகம் புறப்படவுள்ளது.
தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏக்கியராச்சிய அரசியலமைப்பைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கான தீவிர முயற்சிகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில் இதுதொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இக் குழு இந்தியா புறப்படுவதாகத் தெரியவருகிறது.





