இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த நாமல்

இயற்கை அனர்த்தங்களால் இலங்கை பாரிய பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் முதல் பதிலளிப்பாளராக இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (7) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரை சந்தித்து , நாமல் ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். உயர் ஸ்தானிகருடனான சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, ‘இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்தியா வழங்கிய விரைவான ஆதரவுக்கு எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதற்காக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தேன். இந்தியா, சவாலான காலங்களில் தொடர்ந்து எங்களுக்கு முதல் பதிலளிப்பவராக இருந்து வருகிறது. இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.