இரண்டு விவசாயிகள் மின்னல் தாக்கிப் பலி

அனுராதபுரம், விஜிதபுர பகுதியில் நேற்று(27.04.2026) மாலை பெய்த கடும் மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 49 மற்றும் 50 வயதுடைய விஜிதபுர பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

மேற்படி இருவரும் கணக்கன்மடுகம மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள தமது வயல் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த போதே இந்த மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்