புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுலுஓயா பகுதியில் உள்ள இறால் பண்ணையில் நீர் தொட்டியில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் வவுனியாவை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் வலிப்பு நோய் ஏற்பட்டு நீர் தொட்டியில் விழுந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.