இலங்கை நீதித்துறை வரலாற்றில் புதிய மைல்கல்: உயர் நீதிமன்றில் காகிதமற்ற மின்மயமாக்கப்பட்ட வழக்கு விசாரணை ஆரம்பம்!

இலங்கை நீதித்துறை வரலாற்றை டிஜிட்டல் மயமாக்கல் நோக்கி நகர்த்தும் வகையில், முழுமையாக காகிதங்களற்ற மின்மயமாக்கப்பட்ட முறைமையிலான முதலாவது வழக்கு விசாரணை கடந்த மார்ச் 26 ஆம் திகதி உயர் நீதிமன்றில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதியரசர் கலாநிதி சோபித ராஜகருண ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணை இடம்பெற்றது.

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்புக்கு அமைய, அரசுக்கு செலுத்த வேண்டிய 3 மில்லியன் ரூபா நட்ட ஈட்டை வழங்கத் தவறியமைக்காக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கே இவ்வாறு டிஜிட்டல் முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் போது பாரம்பரிய காகிதக் கோப்புகளுக்குப் பதிலாக, உயர் நீதிமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல்

பிரதிவாதிக்கெதிரான குற்றப்பத்திரிகை திறந்த நீதிமன்றில் வாசிக்கப்பட்டதுடன், அதில் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்டு மின்னணு முறைமை ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அணுகல் வழங்கப்பட்டது.

இது தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட “மின்-நீதிமன்றம்” திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகும்.

இந்தச் செயலி முழுமையாக இலங்கை தந்திப் போக்குவரத்து நிறுவனத்தின்  ஒத்துழைப்புடன் உயர் நீதிமன்றத்தினால் மாத்திரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இப்புதிய மின்னணு தாக்கல் முறைமை மூலம் வழக்குத் தாக்கல் செய்வதற்கான செலவுகள் மற்றும் நேர விரயம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கூற்றுப்படி, இப்புதிய முறைமை காரணமாக எழுதுகருவிகளுக்காகச் செலவிடப்படும் பாரிய அளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணி சேமிக்கப்படும். 2026 பெப்ரவரி 10 முதல் ஆரம்பிக்கப்பட்ட இம்முறைமை ஊடாக தற்போது பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

விரைவில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இந்த டிஜிட்டல் முறைமையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த வழக்கின் மேலதிக விசாரணை 2026 மே மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்