திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பூநகர் பகுதியில் மரமொன்றின் கீழிருந்து இன்று புதன்கிழமை (8) காலை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது துப்பாக்கி ரவைகள் 694, 61 ரக மோட்டார் குண்டுகள் – 4, மோட்டார் பியுஸ் – 2, மோட்டார் குண்டு சாஜ்ஜர் – 6, ஆர்.பி.ஜி.குண்டு – 1 ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கும் இரானுவ புலனாய்வு பிரிவினருக்கும் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த வெடிபொருட்களை கண்டறியப்பட்டுள்ளன.
சேருநுவர பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.டி.பண்டார, ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெனீப் ஆகியோரும் குறித்த இடத்துக்கு சென்று வெடிபொருட்களை பார்வையிட்டனர். அவற்றை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் ஈச்சிலம்பற்று பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




