உயிர்த்த ஞாயிறு குண்டு்த்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க நீண்டகாலம் சென்ற நிலையில் தற்போது அதன் இறுதி கட்டத்துக்கு வந்திருக்கிறோம். அதேபோன்று போதைப்பொருள் கடத்தல்கார்களின் பிரதான சூத்திரதாரிகள் யார் என குறிப்பிட்டளவானவர்களை இனம் கண்டிருக்கிறோம் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
ஹோமாக பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டு்த்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க நாங்கள் நீண்டகாலமாக முயற்சித்து வருகிறோம். இன்னும் முயற்சித்து விருகிறோம். தற்போது அதன் இறுதி கட்டத்துக்கு வந்திருக்கிறோம். அதேபோன்று போதைப்பொருள் கடத்தல்கார்களின் பிரதான சூத்திரதாரிகள் யார் என குறிப்பிட்டளவானவர்களை இனம் கண்டிருக்கிறோம். போதைப்பொருளுடன் நேரடியாக தொடர்புடைய வியாபாரிகளையே நாங்கள் ஆரம்பமாக இனம் கண்டோம். தற்போது உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரியை போன்றே இந்த போதைப்பொருள் கட்டத்தல்களுக்கு பின்னால் இருந்த பிரதான சூத்திரதாரிகளை எங்களுக்கு கைதுசெய்ய முடியுமாகி இருந்தது. இவர்கள் மனிதர்கள் கொலை செய்யவும் பணம் எடுக்கிறார்கள். மனிதர்களை பாதுகாக்கவும் பணம் எடுக்கிறார்கள். மக்களிடமிருந்து சம்பளமும் பெறுகிறார்கள். இந்த மூன்று விடயங்களும் கடந்த காலங்கில் இடம்பெற்றிருப்பது, அண்மையில் இடம்பெற்ற கைதுகளின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
வரலாற்றில் எந்த அரசாங்க காலத்திலும் மேற்கொள்ளாத வகையில், தற்போதைய அரசாங்கம் அனைத்தையும் சட்ட ரீதியில் மேற்கொண்டுவருவதால், இந்த போதைப்பொருள் கடத்தல்கள் வியாபாரிகளுக்கு பின்னால் இருந்து செயற்படுபவர்களை கைது செய்ய முடியுமாகி இருக்கிறது.கடந்த காலங்களில் போல் அல்லாமல் சட்டம் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் தற்போது ஆரம்பித்திருக்கிறது. அதனால் தற்போது பழைய அரசியல் அதிகாரிகள் திடுக்கிட்டுள்ளனர்.அவர்கள் மக்களுக்கு எதிராக செய்த நடவடிக்கைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வருகின்றன. மக்களின் பணத்தை கொல்லையடித்து வாழ்ந்துவந்த அவர்களின் மறைவான வாழ்க்கையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு முடியுமாகி இருக்கிறது.
அதேபோன்று இதற்கு முன்னர் ஒருபோதும் இடம்பெறாத வகையில், பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வு பிரிவு வெளிநாடுகளில் மறைந்திருக்கும் போதைப்பொருள் வியாபாரிகள், திட்டமிடல் குற்றவாளிகளை சிவப்பு மற்றும் நீல பிடியாணை அடிப்படையில் அவர்களை கைதுசெய்து, நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளன, தற்போது அந்த வலையமைப்பும் பதற்றமடைந்துள்ளது. அதனால் மக்கள் தற்போது நிம்மதியாக வாழமுடியுமான சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதான் நாங்கள் அடைந்துகொள்ள வேண்டியிருந்த வெற்றியாகும். மக்களின் உதவி இல்லாமல் இதனை எங்களால் செய்திருக்க முடியாது என்றார்.





