ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன!

ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள், பிரதேச ஊடகவியலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்துடன் அரச பங்களிப்புடன் சுகாதார காப்புறுதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடத்தில் அதனை செயற்படுத்துவதற்குள்ளோம். இதன்படி ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் டி சில்வா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தனியார் ஊடகங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. ஊடக நிறுவனங்கள் மூடப்படுதல், ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் செலுத்தப்படாமைஈ முறையாக சம்பளம் வழங்கப்படாமை உள்ளிட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

ஆனால் தனியார் ஊடக நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக இயங்குவதால் அவர்களின் சம்பளம் மற்றும் தொழில் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சுக்கு தலையிடுவதற்கான அதிகாரங்கள் குறைவாகும். தொழில் சட்டத்தின் கீழ் அந்த விடயம் இருப்பதால் தொழில் திணைக்களத்தின் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கான கௌரவம் வழங்கும் வகையில் அரச தகவல் திணைக்கள பணிப்பாளரால் சகல ஊடக நிறுவனங்களுக்கும் முறையாக கொடுப்பனவுகளை வழங்குமாறு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் அவர்களுக்கு முறையாக கொடுப்பனவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கமைய எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்காக பட்டய நிறுவனத்தை தொடர்பான சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அது கூடிய விரைவில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும். ஊடகவியலாளர்களை தொழில்சார் உரிமைகளுடன் கௌரவமாக பணியாற்றக்கூடிய வகையில் பொருத்தமான நிறுவனத்தை அமைக்கும் வகையில் இது அமையும்.

ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள்,பிரதேச ஊடகவியலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்துடன் அரச பங்களிப்புடன் சுகாதார காப்புறுதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

இந்த வருடத்தில் அதனை செயற்படுத்துவதற்குள்ளோம். இதன்படி ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்றார்.