எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, முறைகேடுகள் தொடர்பான தகவல்களை 0112106767/ 0117296130 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.





