எல்ல பாலத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் பலி!

எல்ல 9 வளைவு பாலத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தெமோதரை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நேற்று மாலை எல்ல 9 வளைவு பாலத்தின் தெமோதரை – எல்ல ரயில் மார்க்கத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவர் பாலத்திலிருந்து கீழே குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.