பொகவந்தலாவை ஆரியபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் பெய்த கனமழையின்போது, வீடொன்றின் மீது பெரிய பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக நேற்று வீட்டில் வசிப்பவர்கள், கொழும்பில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த வேளையில் இரவு 8 மணியளவில் நீடித்த மழையின்போது வீட்டின் பின்னால் கட்டப்பட்ட பாதுகாப்புச் சுவர் இடிந்து அவ்வீட்டின் மீது விழுந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததால், குறித்த வீட்டின் இரண்டு அறைகள் மற்றும் சமையலறை பலத்த சேதமடைந்துள்ளன.
பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததால், வீட்டில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடைமைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், நோர்வூட் பகுதியில் பெய்த கனமழையால் வடிகாலமைப்புகள் அடைபட்டதால், மழைநீர் நோர்வூட் நகரத்துக்குள் பாய்ந்ததில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.