கல்கிஸ்சையில் பேருந்து – கார் மோதி விபத்து

கல்கிஸ்ஸை சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் கார் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதன் பாதுகாப்பு பைகள்  செயற்பட்டமையால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இன்று அதிகாலை 1.15 மணியளவில் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில் புனித யாத்திரை சென்று விட்டு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த குழுவினர் இருந்துள்ளனர்.

இந்த விபத்தினால் கார் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது. இருப்பினும், விபத்து ஏற்பட்ட தருணத்தில் காரின் பாதுகாப்பு பைகள் சரியான முறையில் செயற்பட்டதன் காரணமாக, காரில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.