காங்கேசன்துறையில் நிழல்தரு மரங்கள் நடுகை

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையுடன் விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு இணைந்து சூழலை அழகுபடுத்தும் நோக்கில் யாழ்.காங்கேசன்துறைக் கடற்கரையை அண்மித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (10.03.2026) பல நிழல்தரு மரங்கள் நடுகை செய்யப்பட்டன.
இந் நிகழ்வில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.