காலி – பொத்தல பகுதியில் மீட்கப்பட்ட சடலம் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரின் நெருங்கிய சகா என அடையாளம்!

காலி – பொத்தல, வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம், “பொடி லசி” எனப்படும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரின் நெருங்கிய சகா ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலி, பொத்தல பகுதியில் உள்ள வக்வெல்ல பாலத்திற்கு அருகில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் முகம் கடுமையாக சிதைக்கப்பட்டிருந்ததால் அவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டிருந்ததாகவும், அவரது கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக பரிசோதனைகளுக்காக சடலம் காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.