காவல் துறை சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு

பெரும்பாலான இளைஞர்கள் எம்முடன் இணைந்துள்ளார்கள். போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பில்லை என்று பொலிஸ் சான்றிதழ் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் வழங்குவோம். பொலிஸ் சான்றிதழ் ஒப்படைப்பது கட்டாயமாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இளைஞர் அமைப்புகளுடனான சந்திப்பின் பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாணசபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆகவே நாங்கள் அந்த தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம்.அரசாங்கம் குறிப்பிட்ட பொய்களை மக்கள் நன்கு அறிந்துக் கொண்டுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்கு பெரும்பாலான இளைஞர்,யுவதிகள் முன்வந்துள்ளார்கள். நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசியத்தை முன்னிலைப்படுத்தியே நாங்கள் செயற்படுகிறோம்.

போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பில்லை என்று பொலிஸ் சான்றிதழ் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் வழங்குவோம். பொலிஸ் சான்றிதழ் ஒப்படைப்பது கட்டாயமாகும் என்றார்.