வாகனங்களுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை நாளை சனிக்கிழமை (18) நள்ளிரவு முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, சனிக்கிழமை நள்ளிரவு முதல் வழக்கம் போல் கியூ.ஆர் குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் செயற்படுத்தப்படவுள்ளது.
இருப்பினும், எரிபொருள் விநியோகத்துக்காக தற்போது நடைமுறையில் உள்ள வாகன இலக்கத் தகட்டின் ‘ஒற்றை – இரட்டை’ இலக்க முறைமை அனைத்து வாகனங்களுக்கும் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, வாகன சாரதிகள் தடையின்றி பெற்றோலைப் பெற்றுக்கொள்ளும் வகையில் QR முறைமை தற்காலிகமாக தளர்த்தப்பட்டதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கடந்த சனிக்கிழமை (11) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





