கிராண்ட்பாஸ் – முவதொர உயன பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (10) மாலை, கொழும்பு குற்றப்பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 280 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கொழும்பு 14 ஐ சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.





