கிளிநொச்சியில் விபத்து – இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி அறிவியல்நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(19.03.2026) இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.