வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டக் குத்துச் சண்டைப் போட்டி திங்கட்கிழமை (11.08.2025) முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்தக் குத்துச் சண்டைப் போட்டியில் 16 வயது (44-46 கிலோக் கிராம்) எடைப் பிரிவில் ரு.சுலக்சன் முதலாம் இடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கத்தையும், 20 வயது (46-49 கிலோக் கிராம்) எடைப் பிரிவில் ரா.விசாலகன் முதலாம் இடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.



