கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை!

சாலியபுர – தெப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டு உரிமையாளருக்கும், வீட்டிற்கு வருகை தந்த நபரொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியதையடுத்து, வீட்டு உரிமையாளர் குறித்த நபரைத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்யுடைய வீட்டு உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.