கொழும்பில், பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையில், அடுத்த சில நாட்களில் குறிப்பாக கொழும்பில், பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை முன்னறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகும் மேகமூட்டம் இந்த வாரம் புயலாக உருவாகக்கூடும் என்றும் பிபிசி வானிலை ஆய்வாளரான லூயிஸ் லியர் தெரிவித்துள்ளார்.

அது புயலாக மாறினாலும் இல்லாவிட்டாலும், திங்கட்கிழமை பிற்பகுதியிலும் செவ்வாய்க்கிழமையும் இலங்கையின் சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று லூயிஸ் லியர் தெரிவித்துள்ளார்.

இந்த மழையுடனான வானிலை இலங்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இதனால் நாடு சீரற்ற கனமழை பொழிவை எதிர்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாளை (9) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் மழை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.