கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கழிவுகளை வீசிய நபரொருவரை நேற்று புதன்கிழமை (10) அதிவேக நெடுஞ்சாலையின் சீதுவை பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் சாரதி ஒருவர் 19வது கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் அதிவேக வீதியில் கழிவுப் பொருட்கள் அடங்கிய பையை வீசியதை அதிவேக வீதியில் சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டிருந்த அதிகாரிகள் அவதானித்தனர்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அதிவேக நெடுஞ்சாலை சட்டத்தின் கீழ் வீதியில் கழிவுகளை வீசிய குற்றச்சாட்டில் வேனின் சாரதி கைது சீதுவை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.மேலும், சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




