கொஸ்கம துப்பாக்கிச் சூடு ; துப்பாக்கிதாரி உள்ளிட்ட மூவர் கைது!

கொஸ்கம – பொரலுகொட பகுதியில் நவம்பர் 03 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உள்ளிட்ட மூவர் ஹோமாகம பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் செவ்வாய்க்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகின்றார்.

கொஸ்கம – பொரலுகொட பகுதிக்கு முச்சக்கரவண்டியில் சென்ற கும்பல் ஒன்றே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் ஹோமாகம பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய ஹங்வெல்ல தும்மோதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.