நல்லூர்ப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட யாழ் கோண்டாவில் குளங்கரை வை லேன் முழுவதுமாகப் புனரமைக்கப்படாமையைக் கண்டித்துக் குறித்த பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை (13.03.2026) எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். குறித்த வீதியின் ஒருபகுதியைப் புனரமைக்கும் நோக்குடன் சென்ற பணியாளர்கள் நீண்டநேரம் காத்திருந்து விட்டுத் தமது பணிகளை மேற்கொள்ளாமலே அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
இப் பகுதியின் நல்லூர்ப் பிரதேச சபை வட்டார உறுப்பினர் செ.ஜெகபாலன் வீதியை முழுவதுமாகப் புனரமைப்பது தொடர்பாகக் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் நல்லூர்ப் பிரதேச சபை அமர்வில் தீர்மானமொன்றைக் கொண்டு வந்த நிலையில் அத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும், நல்லூர்ப் பிரதேச சபை நிர்வாகம் தீர்மானத்தை மீறி வீதியின் ஒரு பகுதியை மாத்திரம் புனரமைத்துச் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.






