கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கலைமலர் சஞ்சிகை வெளியிட்டு வைப்பு

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு நிகழ்வு புதன்கிழமை (10.12.2025) முற்பகல்- 11.30 மணி முதல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி. சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார். கலாசாலையின் முன்னாள் முதல்வர் வீ.கருணலிங்கம் சஞ்சிகையின் முதற்பிரதியைப்  பெற்றுக் கொண்டார்.