கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக பனை தினச் சிறப்பு நிகழ்வு

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக பனை தினச் சிறப்பு நிகழ்வு புதன்கிழமை (10.06.2026) காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி.ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அச்சுவேலி பனை தென்னை அபிவிருத்திக் கூட்டுத்தாபனப் பொது முகாமையாளர் கிருஷ்ணன் வரதராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 பனை எனும் ஆதாரம் எனும் தலைப்பில் கலாசாலையின் ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜனால் காணொளி தயாரிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டது. பனையும் தமிழ் இலக்கியங்களும் எனும் தலைப்பில் கலாசாலையின் விசேட கல்விநெறி ஆசிரிய மாணவி செல்வகுமாரி தியாகராஜா உரை வழங்கினார்.