சட்டத்தரணி வன்னிநாயக்ககாவல் துறை நிலையத்தில் முன்னிலை!

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (18) காலை முன்னிலையாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு  பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

அத்தோடு, பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கடமையை செய்யவிடாமல் இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை (15) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதனைத் தொடர்ந்து சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.