இயற்கைப் பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தேராவில், இளங்கோபுரம், மாணிக்கபுரம் ஆகிய கிராமங்களிலுள்ள 63 குடும்பங்களுக்கு மொத்தமாக இரண்டு லட்சத்து 52 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசியமான உலர் உணவுப் பொதிகள் ஞாயிற்றுக்கிழமை(14.12.2025) கையளிக்கப்பட்டுள்ளன.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரமத் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகளைக் கையளித்தார்.






