சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட “சமாதானத்துக்கான நடைபயணம்” (Walk for Peace) யாத்திரை, இலங்கையில் எதிர்வரும் 21 – 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த யாத்திரையை வண. பன்னாகார தேரர் தலைமையில் 12 பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் வழிநடத்தவுள்ளனர்.
ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த ஆன்மீக நடைபயணம் அநுராதபுரத்தில் ஆரம்பமாகி கொழும்பில் நிறைவடையவுள்ளது.
சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் புனித ஜய ஸ்ரீ மகா போதியின் ஒரு கிளையையும், புனித சின்னங்களையும் இந்த யாத்திரையின்போது பௌத்த தேரர்கள் தாங்கிச்செல்வர்.
அரசாங்கத்தின் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் ஆதரவுடன் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நடைபயணம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அரச நிகழ்வு மற்றும் கலாசாரக் கண்காட்சியுடன் நிறைவடையும். இக்கண்காட்சியில் இலங்கையின் பௌத்த பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.





