சாவகச்சேரிச் சந்தையில் மரமொன்று தறித்து வீழ்த்தியதால் அங்கு தேங்காய் வியாபார நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை எனச் சாவகச்சேரி நகர சபை மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதன்கிழமை (11.02.2026) நேரில் சென்று கள ஆய்வு செய்தார். இந்தக் கள விஜயத்தின் போது சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
இதன்போது சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய போது அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.




