பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று வியாழக்கிழமை (5) ரத்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் அனைவரும் இன்று காலை கடமைக்கு செல்வதற்கு முதல் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்
இதன்போது சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரியிடமிருந்து 7 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் ஹக்மன – எல்லவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





