சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த 07 பேர் கடற்படையினரால் கைது!

சிறிலங்கா  கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவின் வடக்கு கடல் பகுதியில் வியாழக்கிழமை (5) இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த 07 நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அதன்படி, கிளிநொச்சி, இரணைதீவுக்கு அப்பால் வடக்கு கடல் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புவனக நிறுவனம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் பரிசோதிக்கப்பட்டன.

அங்கு, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு நபர்கள், முன்னூற்று 335 கடல் அட்டைகள், இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 36 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தைத் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பதற்கு எதிராகவும் அனைத்துக் காணாமலாக்கப்படல்களுக்கும் நீதியை நிலைநாட்ட கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில், செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியோம், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், மேலதிக அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், PTA ஐ நீக்கு, அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமையை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்பை வென்றெடுப்போம் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.