செம்மணி புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் “என்று தணியும்” நூல் வெளியீடு!

யாழ். பல்கலைக்க ஊடகத்துறை  மாணவி புவஸ்டினா மெய்யழகன் எழுதிய “என்று தணியும்” நூல்  வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (14)  இராமநாதன் வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக பளை பிரதேச செயலாளரும்  கவிஞருமான ஜெயசீலன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ம. இளம்பிறையன் கலந்து கொண்டார்.

தமிழ் மக்களின் வலி சுமந்த செம்மணி மனித புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் சம்பாசனையுடன் கூடிய நாவல் வடிவமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

நூல் வெளியீட்டினை  எழுத்தாளரும் தமிழ் ஆசிரியருமான கனக பாரதி செந்தூரன் நிகழ்த்தினார்.

நூலினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பளை பிரதேச செயலாளரும் கவிஞருமான ஜெயசீலன் வெளியீட்டு வைக்க முதல் பிரதியை ராஜா கிறீம்  ஹவுஸ் நிறுவனங்களின் உரிமையாளர் சின்ன ராஜா சண்முகநாதன் பெற்றுக்கொண்டார்.