செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 47 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை (8) நடைபெற்றது.
இதன்போது 8 மனித எலும்புக்கூடு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 5 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 101 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 515 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 506 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.






