வடகிழக்கு பருவமழை தற்போது வலுவாகச் செயல்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்ழமுக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளின் வடகிழக்கு மழைக்கால புள்ளிவிபரங்களை ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
அறிக்கையின் படி;
வட மாகாணத்தில் சாதாரணத்தை விட அதிக மழை பெய்யக்கூடும்.
வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சாதாரண அளவிற்கு அண்மித்த மழைவீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை சாதாரணத்தை விட குறைவாக இருக்கக்கூடும்.
ஆனால், டிசம்பர்–ஜனவரில் புதிய தாழ்வு மண்டலங்கள் அல்லது புயல்கள் உருவானால், இந்த முன்னறிவிப்புகள் மாறக்கூடும் எனவும் அதிகாரி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




