டிஜிட்டல் சேவைகள் மீதான வற் வரி விதிப்பு மீண்டும் ஒத்திவைப்பு

டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத பெறுமதி சேர்க்கப்பட்ட வரி விதிப்பை , எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி வரை அரசாங்கம் மீண்டும் ஒத்திவைத்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டத்தில் மேற்கொள்ள இருக்கும் உத்தியோகபூர்வ திருத்தங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை, இந்த வரி அறவிட நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்தார்.

சிறப்பு வர்த்தமானி எண் 2443/30-இல் குறிப்பிட்டதன்படி , டிஜிட்டல் சேவைகள் மீதான இந்த வரி, கடந்த ஆண்டு ஒஅக்டோபர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.பின்னர்,விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம்  ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.