டெஸ்ஃபெரிஒக்சமின் மெசிலேட் ஊசிமருந்துக் குப்பிகள் விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

டெஸ்ஃபெரிஒக்சமின் மெசிலேட் ஊசி மருந்து பிபீ 500 மில்லிக்கிராம் (500mg) ஊசிமருந்துக் குப்பிகள் 540,000 விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குருதியை உறையச் செய்யும் இரத்தச்சோகை நோய் பீடித்துள்ளவர்கள் மற்றும் தலசீமியா நோயாளர்களின் உடலிலிருந்து மேலதிக இரும்பை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும், டெஸ்ஃபெரிஒக்சமின் மெசிலேட் ஊசி மருந்து பிபீ 500 மில்லிக்கிராம் (500mg) ஊசிமருந்துக் குப்பிகள் 540,000 விநியோகிப்பதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக இரண்டு  விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரோயொரு விலைமனுதாரரான இலங்கையின் ABC Pharma Services (Pvt) Ltd. (Manufacturer : Gland Pharma Limited, India)  இற்கு 791.1 மில்லியன் ரூபாய்களுக்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.