கடந்த 2002ஆம் ஆண்டு தணமல்வில பகுதியில் 13 வயது சிறுமி உட்பட 5 பேரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட இருவருக்கு, 24 ஆண்டுகள் கழித்து, மொனராகலை மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (26) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
2002 ஜூன் 6ஆம் திகதி தணமல்வில, கித்துல் கொடே பகுதியில் டி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 12 போர துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து மொனராகலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டு, தணமல்வில, சூரியவெவ ஆகிய வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.




